பீகார் மாநிலத்தின் பிரபல தொழிலதிபரும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவருமான கோபால் கேம்கா, நேற்று இரவு பாட்னாவில் உள்ள தனது வீட்டின் வெளியே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு கேம்கா, தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத குற்றவாளிகள் அவரை சுட்டுவிட்டு, தப்பிச் சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேம்கா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், சம்பவ இடத்தில் இருந்து ஒரு தோட்டா மற்றும் அதன் வெற்று உறை கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்" என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட கேம்கா மகன் குஞ்சன் கேம்கா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பதும், தந்தையும் மகனும் ஒரே விதமான கொடூரமான முடிவை சந்தித்திருக்கிறார்கள் என்ற தகவல் அனைவரையும் உலுக்கியுள்ளது.