Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

8 டம்ளர் தண்ணீர் போதுமா? உடலுக்கு எவ்வளவு நீர் தேவை?

Advertiesment
நீர்ச்சத்து

Mahendran

, திங்கள், 16 ஜூன் 2025 (18:54 IST)
தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ள நம்பிக்கை. ஆனால், இது ஒரு கட்டுக்கதை என சில மருத்துவர்கள் கூறுகின்றனர். உடல் தினசரி இழக்கும் திரவத்தை ஈடுசெய்யும் அளவுக்கு தண்ணீர் பருக வேண்டும் என்பதே சரியான அணுகுமுறை என்று கூறப்படுகிறது.
 
நம் உடலுக்கு குறைந்தது 1.5 லிட்டர் திரவம் நீரிழப்பை தவிர்க்க அவசியம். இதில் சுமார் 20% உண்ணும் உணவில் உள்ள ஈரப்பதத்தில் இருந்து கிடைக்கும். பழங்கள், காய்கறிகள், இறைச்சிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை பொறுத்து இந்த அளவு மாறும். 1.5 லிட்டர் என்பது குறைந்தபட்ச அளவே. அவரவர் உடலமைப்பு, உடல் உழைப்பு, காலநிலை ஆகியவற்றுக்கு ஏற்ப நீர் தேவை மாறுபடும்.
 
நம் உடலில் இழக்கப்படும் நீரின் அளவுக்கு ஏற்ப நீரை எடுத்து கொள்ள வேண்டும். கடின உழைப்பு மட்டுமின்றி நாம் ஓய்வெடுக்கும்போதும் கூட உடல் நீரை இழக்கிறது. 20-25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் ஒரு ஆரோக்கியமான நபர், சிறுநீர் வழியாக தினமும் 500 மி.லி.யும், சுவாசம் மற்றும் சருமம் மூலம் சுமார் 700 மி.லி.யும் நீரை இழக்கிறார். ஒட்டுமொத்தமாக, மனித உடல் ஒரு நாளைக்கு சுமார் 2 முதல் 3 லிட்டர் தண்ணீரை இழக்கிறது. இது கடுமையான வெயில் அல்லது உடற்பயிற்சியின்போது அதிகரிக்கும்.
 
எனவே ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் என்ற கணக்கை மறந்து, உடலின் தேவைக்கு ஏற்ப நீர் பருக வேண்டும்.  சிறுநீர் தெளிவாகவோ அல்லது வெளிர் மஞ்சள் நிறமாகவோ இருந்தால் போதுமானது. அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் கூடுதலாக தண்ணீர் பருக வேண்டும். தாகம் எடுக்கும்போது அதற்கேற்ப தண்ணீர் அருந்துவது நல்லது.
 
Edited by Mahendran  
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீவிர உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்: முக்கிய எச்சரிக்கை