Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

vinoth
திங்கள், 11 நவம்பர் 2024 (12:44 IST)
கோலி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உலகக் கிரிக்கெட்டின் முகமாக இருக்கிறார். ஆனால் கடந்த சில ஆண்டுகள் அவருக்கு சிறப்பான ஆண்டுகளாக அமையவில்லை. தன்னுடைய மோசமான ஃபார்மில் இருந்து திரும்பி கோலி கடந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் 2024 ஆம் ஆண்டு மீண்டும் அவருக்கு ஒரு சோகமான ஆண்டாக உள்ளது. இந்த ஆண்டில் அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 25 ரன்கள்தான் சேர்த்து வருகிறார்.

விரைவில் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள நிலையில் கோலியின் ஃபார்ம் கவலையளிக்கிறது. இந்நிலையில் கோலி பற்றி பேசியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “கோலி கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். வேறு ஒருவராக இருந்தால் அவர் இந்திய அணியில் இருந்தே தூக்கப்பட்டிருப்பார்.” எனப் பேசியிருந்தார்.

ஆனால் அதற்கு இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கார்த்திக் பதிலளித்துள்ளார். அதில் “ரிக்கி பாண்டிங்குக்கு இந்திய அணியுடன் என்ன தொடர்பு? அவர் கோலி பற்றி கவலைப்படாமல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் கவனம் செலுத்தட்டும். கோலியும் ரோஹித்தும் நாம் நினைப்பதை விட கடினமான மனிதர்கள். அவர்கள் ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளனர். வரும் காலத்திலும் படைப்பார்கள்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

2வது டி20 கிரிக்கெட்: வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்து வீசியும் இந்தியா தோல்வி..

AUS vs PAK ODI: சொந்த மண்ணிலேயே வீழ்ச்சி அடைந்த ஆஸ்திரேலியா! - 22 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments