Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்பர் ஹெர்ட் பணத்தைக் கொடுக்கலன்னா…? – ஜானி டெப் வழக்கறிஞர் சொன்ன பதில்!

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (17:48 IST)
ஹாலிவுட் சினிமாவில் ரம் டையரி, ஸ்வீனி டோட், சார்லி அண்ட் தி சாக்லேட் பேக்டரி என பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர்கள் ஜானி டெப்.

முக்கியமாக இவர் கேப்டன் ஜாக் ஸ்பேரோவாக நடித்த பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் மூலம் உலக புகழ் பெற்றார். ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தான ஜானி டெப் ஹாலிவுட்டில் பிரபல நடிகையான ஆம்பர் ஹெர்டை கடந்த 2015ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

ஆம்பர் ஹெர்ட், ஜானியை விட 25 வயது இளையவர். இரண்டு ஆண்டுகள் நல்லபடியாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை 2 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2017ல் இவர்கள் விவாகரத்து செய்துக் கொண்டார்கள். அதன்பின்னர் 2019ல் பத்திரிக்கை ஒன்றிற்கு கட்டுரை எழுதிய ஆம்பர் அந்த கட்டுரையில் ஜானி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.

இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பலரும் ஜானி டெப்பை விமர்சிக்க ஆரம்பித்தனர். வார்னர் ப்ரதர்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் நிறுவனங்கள் ஜானி ஒப்பந்தமான படங்களில் இருந்து அவரை விலக்கின. இதனால் அவருக்கு பட வாய்ப்பு குறைந்தது. இதனால் ஆம்பர் ஹெர்ட் தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக ஜானி டெப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை பல கட்டங்களாக நடந்த நிலையில் தற்போது தீர்ப்பு ஜானிக்கு ஆதரவாக வந்துள்ளது. மேலும் இழப்பீடாக ஆம்பர் ஹெர்ட் 15 மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஜானி டெப்பின் வழக்கறிஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது “ஆம்பர்  ஹெர்ட் அந்த பணத்தைக் கட்டவில்லை என்றால் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்” என்று கேட்டபோது “அவர் மேல் முறையீடு செய்யவில்லை என்றால் டெப் அந்த பணத்தை வேண்டாம் எனக் கூட சொல்லலாம். நாங்கள் முன்பே சொன்னது போல இது பணம் சம்மந்தப்பட்ட விஷயம் இல்லை. ஜானி டெப்பின் இழந்த நற்பெயரை மீட்டெடுக்கும் விஷயம்” என பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லப்பர் பந்து படம் மிகச்சிறப்பான படம்… பாராட்டிய மோகன்லால்!

புஷ்பா 2: கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவனுக்கு நினைவு திரும்பியது!

ரஜினி பட டைட்டில் இல்லை. ‘சூர்யா 44’ டைட்டில் டீசர் வெளியீடு..!

ஷாருக் கானின் ‘கிங்’ படத்தின் இயக்குனர் திடீர் மாற்றம்!

ராமாயணம் படத்தில் வில்லனாக நடிக்க இவ்வளவு சம்பளமா?... ஆச்சர்யப்படுத்தும் யாஷ்!

அடுத்த கட்டுரையில்