Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆம்பர் ஹெர்ட் சொன்னது பொய்..! ஜானிக்கு ஆதரவாக தீர்ப்பு! – ஜானி டெப் ரசிகர்கள் மகிழ்ச்சி!

johnny depp
, வியாழன், 2 ஜூன் 2022 (10:36 IST)
ஹாலிவுட் வட்டாரத்தையே பரபரப்பில் ஆழ்த்திய ஜானி டெப் – ஆம்பர் ஹெர்ட் வழக்கில் ஜானிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹாலிவுட் சினிமாவில் ரம் டையரி, ஸ்வீனி டோட், சார்லி அண்ட் தி சாக்லேட் பேக்டரி என பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர்கள் ஜானி டெப். முக்கியமாக இவர் கேப்டன் ஜாக் ஸ்பேரோவாக நடித்த பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் மூலம் உலக புகழ் பெற்றார்.

ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தான ஜானி டெப் பல காலமாக பல பெண்களுடன் லிவிங் உறவில் மட்டுமே நீடித்து வந்தார். இந்நிலையில் ஹாலிவுட்டில் பிரபல நடிகையான ஆம்பர் ஹெர்டை ஜானி கடந்த 2015ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

ஆம்பர் ஹெர்ட், ஜானியை விட 25 வயது இளையவர். இரண்டு ஆண்டுகள் நல்லபடியாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை 2 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2017ல் இவர்கள் விவாகரத்து செய்துக் கொண்டார்கள். அதன்பின்னர் 2019ல் பத்திரிக்கை ஒன்றிற்கு கட்டுரை எழுதிய ஆம்பர் அந்த கட்டுரையில் ஜானி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.
webdunia

இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பலரும் ஜானி டெப்பை கண்டித்து பேசத் தொடங்கினர். வார்னர் ப்ரதர்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் நிறுவனங்கள் ஜானி ஒப்பந்தமான படங்களில் இருந்து அவரை விலக்கின. இதனால் அவருக்கு பட வாய்ப்பு குறைந்தது. இதனால் ஆம்பர் ஹெர்ட் தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக ஜானி டெப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

அதேசமயம் ஆம்பர் ஹெர்டும் ஜானி மீது பாலியல் கொடுமை செய்ததாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் கடந்த 2 மாதமாக இறுதிகட்ட விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் அளவிற்கு மக்கள் இந்த வழக்கை உற்று நோக்கினர்.

இந்த வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், ஆம்பர் ஹெர்ட் அளித்த புகார்கள் ஆதாரமற்றவை, பொய்யாக திரிக்கப்பட்டவை என்று கூறியுள்ளது. ஜானியின் புகழுக்கு களங்கள் விளைவிக்கும் விதமாக திட்டமிட்டே கட்டுரை எழுதியது, வழக்கு தொடர்ந்ததற்கு அபராதமாக ஜானிக்கு 10 மில்லியன் டாலர்களும், நீதிமன்றத்திற்கு 5 மில்லியன் டாலர்களும்  என மொத்தமாக 15 மில்லியன் டாலர்கள் அபராதமாக செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் ஜானி டெப் வெற்றிப்பெற்றுள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மீண்டும் ஜானிடெப் படவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசனின் விக்ரம் நாளை வெளியாகிறது - எகிறும் எதிர்பார்ப்புகள்!