பிரபல மார்வெல் ஸ்டுடியோஸின் தோர் லவ் அண்ட் தண்டர் படத்தின் ரிலீஸ் தேதியை திடீரென மாற்றியுள்ளது மார்வெல் நிறுவனம்.
	
	
	சூப்பர்ஹீரோ படங்களாக எடுத்து தள்ளி உலகம் முழுவதும் மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்துள்ள நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ஸ்பைடர்மேன்; நோ வே ஹோம், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் அண்ட் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் போன்ற படங்கள் உலக அளவில் பெரும் வசூலை குவித்துள்ளன.
 
 			
 
 			
					
			        							
								
																	அந்த வரிசையில் அடுத்ததாக வெளியாக உள்ளது பிரபல சூப்பர்ஹீரோ தோரின் லவ் அண்ட் தண்டர். இந்த படத்தில் க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் தோராக நடித்துள்ளார். பேட்மேன் படத்தில் ஹீரோவாக நடித்த கிறிஸ்டியன் பெல் இதில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தின் அனைத்து மொழி ட்ரெய்லர்களும் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இந்த படம் ஜூலை 8ம் தேதி இந்தியாவில் பிராந்திய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மார்வெல் நிறுவனம் ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளது. அதன்படி ஒருநாள் முன்னதாக ஜூலை 7ம் தேதியே இந்த படம் ரிலீஸாக உள்ளது. வியாழக்கிழமை அன்று படம் வெளியாவதால் அது Thursday இல்லை Thorsday என மார்வெல் தெரிவித்துள்ளது.