Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் ‘தி கிரே மேன்’…. வெளியான Exclusive வீடியோ

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் ‘தி கிரே மேன்’…. வெளியான Exclusive வீடியோ
, புதன், 8 ஜூன் 2022 (10:06 IST)
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் தி கிரே மேன் திரைப்படத்தின் புதிய வீடியோ துணுக்கு வெளியாகி கவனம் பெற்றது.

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களான ரஸ்ஸோ சகோதரர்கள் இயக்கும் நெட்பிளிக்ஸ் திரைப்படமான ’தி கிரே மேன்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ள நான்கு முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர் என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த விபரங்களை எழுத்தாளர் மார்க் கிரேனி முன்னர் பகிர்ந்திருந்தார். அதில் “இந்த படத்தில் ரயான் காஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ்” நடிக்கிறார் என்று பகிர்ந்திருந்தார்.

சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. ஆனால் டிரைலரில் தனுஷுக்கான காட்சிகள் அதிகமாக இல்லை. இது இந்திய ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமானதாக அமைந்தது. இந்நிலையில் தற்போது படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களான கிறிஸ் இவான்ஸ் மற்றும் ரையான் கோஸ்லிங் ஆகியோர்  சம்மந்தபட்ட ஸ்டண்ட் காட்சி ஒன்று இணையத்தில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ துணுக்கு தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் படம் எப்படி இருக்கு… சிவகார்த்திகேயன் சொன்ன விமர்சனம்… வைரலாகும் டிவீட்!