Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

83 நாடுகளில் 268 மில்லியன் மணி நேரம்..! – ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் படைத்த சாதனை!

Stranger Things
, புதன், 1 ஜூன் 2022 (17:56 IST)
சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 4 இதுவரை நெட்ப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட சிரிஸாக சாதனை படைத்துள்ளது.

நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் பிரபலமான வெப் சிரிஸில் ஒன்று ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ். இதுவரை 3 சீசன்கள் வெளியாகியுள்ள இந்த தொடரின் நான்காவது சீசனின் முதல் வேல்யூம் சமீபத்தில் வெளியானது. இந்த வெப் சிரிஸின் முந்தைய சீசன்கள் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் சமீபத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

நான்காவது சீசனின் முதல் வேல்யூம் வெளியாகி ஒருவார காலத்திற்கு ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் புதிய சாதனை படைத்துள்ளது. 83 நாடுகளில் 268.79 மில்லியன் மணி நேரம் பார்க்கப்பட்டுள்ளது ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ். நெட்ப்ளிக்ஸில் வெளியான தொடர்களிலேயே ஒரு வாரத்தில் அதிக மில்லியன் மணி நேரங்கள் பார்க்கப்பட்ட சீரிஸில் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் முதல் இடம் பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தன்னை தானே செதுக்கிக் கொண்டவர் பிரதமர் மோடி! – அக்‌ஷய் குமார் புகழாரம்!