Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காலையில் கல்லூரிக்கு சென்றவர் இரவில் பிணமானார் – சாலையோரம் கிடந்த பெண்ணின் உடல் !

Advertiesment
காலையில் கல்லூரிக்கு சென்றவர் இரவில் பிணமானார் – சாலையோரம் கிடந்த பெண்ணின் உடல் !
, வியாழன், 24 அக்டோபர் 2019 (09:58 IST)
வேலூர் மாவட்டம் ஒச்சேரி எனும் பகுதியின் அருகே சரஸ்வதி எனும் பெண் சாலையோரத்தில் பிணமாகக் கிடந்ததால் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள மாமண்டூர் எனும் பகுதியில் சரஸ்வதி (55) எனும் பெண் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதி பணியாளராக வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற இவர் இரவு வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரின் மகள் கலா தன் உறவினர்களோடு தாயைத் தேட ஆரம்பித்துள்ளார்.

நள்ளிரவில் சரஸ்வதி மாமண்டூரில் உள்ள சாலையின் ஓரத்தில்  பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கலா போலிஸுக்குப் புகார் அளித்துள்ளார். உடலைக் கைப்பற்றிய போலிஸார் பிரேதப் பரிசோதனை முடிந்ததும் சரஸ்வதியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் அவர்கள் உடலை அடக்கம் செய்யாமல் சரஸ்வரி பணிபுரிந்த கல்லூரி வாசலுக்கு கொண்டு சரஸ்வதியின் உடலைக் கிடத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த செய்தியறிந்து வந்த போலிஸார் அவர்களை சமாதானப்படுத்தி சரஸ்வதியின் உடலை அடக்கம் செய்ய வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறுது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. கொலை சம்மந்தமாக போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் போராட்டம் வெற்றி – 4 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் !