தன்னை விட்டுக் காதலன் தற்கொலை செய்துகொண்டதால் குரைபிரசவத்தில் பிறந்த குழந்தையைக் கொலை செய்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த தாய் ஒருவர்.
கேரள மாநிலம் இடுக்கிப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி அவர். அங்குள்ள கட்டப்பனை அரசு கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் நெருக்கமாக பழக அந்தப் பெண் கர்ப்பமாகியுள்ளார்.
இந்த தகவலை தனது காதலரிடம் தெரிவித்து உடனடியாக திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியுள்ளதாலும் அவர் பயத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் காதலனின் இழப்பாலும் கர்ப்பத்தைக் கலைக்கும் வழி தெரியாமலும் மாணவி பதற்றத்தில் விடுதியிலேயே தங்கியுள்ளார். அதிர்ச்சியளிக்கும் விதமாக அவருக்கு 6 மாதத்திலேயே குரை பிரசவத்தில் குழந்தைப் பிறந்துள்ளது. இதையடுத்துக் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த அவர் அதன் பின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு புத்தகப்பையில் மூட்டைக் கட்டியுள்ளார்.
அதன் பின் குழந்தையின் உடலை அப்புறப்படுத்துவதாக தோழியை அழைக்க, அவர் குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து போலீஸுக்குத் தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.