Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருச்செங்கோடு பியூட்டிசியன் கொலையில் சிக்கிய முக்கிய ஆதாரம் – திருமணம் தாண்டிய காதலால் நடந்த கொடூரம் ?

Advertiesment
திருச்செங்கோடு பியூட்டிசியன் கொலையில் சிக்கிய முக்கிய ஆதாரம் – திருமணம் தாண்டிய காதலால் நடந்த கொடூரம் ?
, செவ்வாய், 22 அக்டோபர் 2019 (09:31 IST)
திருச்செங்கோட்டில் பரபரப்புகளைக் கிளப்பியுள்ள பியூட்டிசியன் ஷோபனா கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு கொலையாளி பற்றிய துப்புக் கிடைத்துள்ளது.

திருச்செங்கோடு இறையமங்களம் பகுதியைச் சேர்ந்தவர் சோபனா. இவரது கணவர் செந்தில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். தம்பதிகளுக்கு சச்சின், தேவா என்ற இரு மகன்கள் உள்ளனர். ஷோபனா திருச்செங்கோடில் தனது உறவினர் ஒருவரின் பியூட்டி பார்லரை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி ஷோபனா பியூட்டி பார்லரில் இருந்து வழக்கமாக வீட்டுக்கு வரும் நேரத்துக்கு வரவில்லை.  இதையடுத்து மனைவியிடம் இருந்து வந்த அழைப்பில் பேசிய ஷோபனா மகனின் பிறந்தநாளுக்காக துணிகள் வாங்க சென்றததாகவும் அதனால் பேருந்தை விட்டு விட்டதாகவும் தனது நண்பருடன் காரில் வருவதாகவும் சொல்லியுள்ளார்.

ஆனால் நள்ளிரவு ஆகியும் அவர் வீட்டிற்கு வராததால் பயந்து போன கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலிஸாரின் தேடுதலில் மறுநாள் காலையில் புள்ளிப்பாளையம் எனும் பகுதிக்கு அருகே ஷோபனாவின் உடலைக் கண்டெடுத்துள்ளனர். இச்சமபவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொலையாளி யார் என்பது குறித்துப் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இப்போது ஷோபனாவின் செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் கடைசியாக ஷோபனா கணேஷ்குமார் என்பவரை அழைத்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அவரது செல்போனில் கணேஷ்குமாரின் புகைப்படங்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கணேஷ் குமார் யார் என்பதும் அவருக்கும் ஷோபனாக்கும் முறையற்ற உறவு ஏதேனும்  இருந்ததா எனவும் விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதலில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் போலிஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தை வெளுத்து வாங்கப்போகும் கனமழை..