கள்ளக்காதலிக்கு இன்னொரு காதலனா ? – காதலன் நச்சரிப்பால் நடந்த கொலை !

புதன், 23 அக்டோபர் 2019 (10:58 IST)
சென்னை கொரட்டூரைச் சேர்ந்த ரௌடி சுரேஷ் கொலை வழக்கில் அவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட கார்த்திகாதான் முக்கியக் குற்றவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை கொரட்டூரைச் சேர்ந்த ரௌடி சுரேஷ் சில நாட்களுக்கு முன்னர் மாயமானது தொடர்பாக நடந்த வழக்கில் அவரது தலையில்லா உடல் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மீது கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து நடந்த விசாரணையில் சுரேஷ்குமார் கடைசியாக கார்த்திகா என்ற பெண்ணோடு தொடர்பு கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், கார்த்திகாவுக்கும் சுரேஷுக்கும் இடையில் உறவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு கட்டத்தில் இந்த உறவை முறித்துக்கொள்ள நினைத்துள்ளார் கார்த்திகா. இதனால் கார்த்திகாவுக்கு வேறொருவருடன் தொடர்பு இருக்கிறது என சந்தேகம் அடைந்துள்ளார் சுரேஷ். இதனால் கார்த்திகாவுக்கு அடிக்கடி போன் செய்து தொல்லை செய்ய ஆரம்பித்துள்ளார்.’

இதைத் தனது கணவரிடம் கார்த்திகா சொல்ல அவரை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அவர் சாப்பிடும் இட்லியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவர் மயக்கமடைந்த பிறகு உடல்வேறு, தலைவேறாக வெட்டி வீசியுள்ளனர். இதையடுத்து கார்த்திகா, அவரது கணவர் மற்றும் அவரின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் தமிழகத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல்..