Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகனின் காதலுக்காக உயிரை விடத் துணிந்த பெற்றோர் – தீக்குளிக்க முயன்றததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு !

Advertiesment
மகனின் காதலுக்காக உயிரை விடத் துணிந்த பெற்றோர் – தீக்குளிக்க முயன்றததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு !
, செவ்வாய், 22 அக்டோபர் 2019 (08:57 IST)
தர்ம்புரி மாவட்டத்தில் மத்திம வயது தம்பதிகள் இருவர் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்த முத்துசாமி மற்றும் செந்தாமரை என்ற தம்பதிகள்  யாரும் எதிர்பார்க்காத நேரம் பார்த்து தங்கள் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதைப் பார்த்த அங்கே காவலுக்கு இருந்த காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் பல தகவல்களை சொல்லியுள்ளனர்.

தம்பதிகளின் 22 வயதான மகன் கார்த்திக் போலிஸில் ஆவதற்காகப் படித்து வருகிறார். கார்த்திக்குக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்த காதலைப் பற்றி அறிந்த பெண்ணின் தந்தை லட்சுமணன் அந்த மைனர் பெண்ணுக்கு வேறு ஒருவருக்குக் கட்டாயக் கல்யாணம் செய்து வைத்துள்ளார். ஆனால் அந்த கல்யாணம் பிடிக்காத பெண் தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதையறிந்து அதிர்ந்த அவரைப் பார்ப்பதற்காக கார்த்திக் செல்ல அவரைப் பார்க்க விடாமல் லட்சுமணன்  மற்றும் உறவினர்கள் தடுத்துள்ளனர். மேலும் இனிப் பார்க்க வந்தால் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த கார்த்திக் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது சம்மந்தமாக போலிஸாரிடம் கொடுத்த புகாருக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தாங்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக சொல்லியுள்ளனர். இதையறிந்த மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்துப் பேசி நடவடிக்கை  உரிய நடவடிக்கை எடுப்பதாக சொல்லி அவர்களை அனுப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி