Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் அந்த சூப்பர் முதல்வர்? உங்கள் சாயம் வெளுத்துவிட்டது, முதல்வரே.. அண்ணாமலை

Siva
திங்கள், 10 மார்ச் 2025 (15:43 IST)
யார் அந்த சூப்பர் முதல்வர்? உங்கள் சாயம் வெளுத்துவிட்டது, முதல்வரே.. என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதோடு, 3 கேள்விகளையும் எழுப்பியுள்ளார். அந்த கேள்விகள் இதோ:
 
முதல் கேள்வி: திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார்.
 
இரண்டாவது கேள்வி: மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்? உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் சிபிஎஸ்இ  மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா?
 
மூன்றாவது கேள்வி: யார் அந்த சூப்பர் முதல்வர்? ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்துவிட்டது, முதல்வரே. இனியும் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தின் 2 நகரங்களுக்கு கூடுதல் விமான சேவை: விமான போக்குவரத்து அமைச்சகம்

மும்மொழி கொள்கையை ஏற்பதாக ஒருபோதும் கூறியதில்லை: கனிமொழி எம்பி

எங்கள் முதல்வரே சூப்பர் முதல்வர் தான்: அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்..!

அமைச்சர் தர்மேந்திரா பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் பதிவு..!

தேசிய கல்வி கொள்கையை தமிழக முதல்வர் ஏற்று கொண்டார், சூப்பர் முதல்வர் தடுத்துவிட்டார்: தர்மேந்திரா பிரதான்

அடுத்த கட்டுரையில்
Show comments