Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேசிய கல்வி கொள்கையை தமிழக முதல்வர் ஏற்று கொண்டார், சூப்பர் முதல்வர் தடுத்துவிட்டார்: தர்மேந்திரா பிரதான்

Advertiesment
Dharmendra Pradhan,

Mahendran

, திங்கள், 10 மார்ச் 2025 (12:31 IST)
தேசிய கல்விக் கொள்கைகளை ஏற்றுகொள்ள தமிழக முதல்வர் ஒப்புக்கொண்டதாகவும், அதற்கு கையெழுத்து போடத் தயாராக இருந்ததாகவும், ஆனால் "சூப்பர் முதல்வர்" அதை தடுத்து விட்டதாகவும் மத்திய கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
 
"திமுக எம்.பி.க்கள் மற்றும் தமிழக கல்வித் துறை அமைச்சர் என்னை சந்திக்க வந்த போது, தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புக்கொண்டார்கள். அப்போது ஒப்புதல் கொடுத்துவிட்டு, இப்போது திடீரென பிரச்சனையை உருவாக்குகிறார்கள். தமிழகம் முதலில், தேசிய கல்விக் கொள்கை திட்டத்தில் கையெழுத்திட முன் வந்தது. ஆனால் சூப்பர் முதல்வர் அதனை தடுத்து விட்டார்.
 
தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை தமிழக அரசு பணயம் வைத்துவிட்டது. சூப்பர் முதல்வர் சொன்னதை கேட்டு, முதல்வர் கையெழுத்திட தயங்குகிறார்," என்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார்.
 
மேலும், "தமிழக அரசு மாணவர்களின் எதிர்காலத்தை அரசியல் செய்வதோடு மட்டுமின்றி, பாஜக ஆட்சியில் இல்லாத கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. 'ஹிந்தி திணிக்கப்படுவதாக' கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது," என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக-அதிமுகவை விஜய் ஏன் விமர்சிக்கவில்லை - திருநாவுக்கரசர் கேள்வி