Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமைச்சர் தர்மேந்திரா பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் பதிவு..!

Advertiesment
Stalin

Mahendran

, திங்கள், 10 மார்ச் 2025 (13:57 IST)
தேசிய கல்விக் கொள்கைகளை ஏற்றுகொள்ள தமிழக முதல்வர் ஒப்புக்கொண்டதாகவும், அதற்கு கையெழுத்து போடத் தயாராக இருந்ததாகவும், ஆனால் "சூப்பர் முதல்வர்" அதை தடுத்து விட்டதாகவும் மத்திய கல்வி அமைச்சர் கூறியுள்ள நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் தர்மேந்திரா பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான்  அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்!
 
தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? 
 
தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இதனை ஏற்கிறாரா?
 
NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?
 
பிரதான் அவர்களே,  நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!!
 
நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.
 
தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்!
 
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேசிய கல்வி கொள்கையை தமிழக முதல்வர் ஏற்று கொண்டார், சூப்பர் முதல்வர் தடுத்துவிட்டார்: தர்மேந்திரா பிரதான்