Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்தால் மரண தண்டனை.. மபி முதல்வர் அறிவிப்பு..!

Advertiesment
பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்தால் மரண தண்டனை.. மபி முதல்வர் அறிவிப்பு..!

Siva

, ஞாயிறு, 9 மார்ச் 2025 (16:03 IST)
பெண் குழந்தைகளை மதம் மாற்றம் செய்தால் மரண தண்டனை அளிக்கப்படும் என மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சர்வதேச மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உரையாற்றிய போது, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுயமரியாதைக்காக இந்த அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். மேலும், பெண் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும், அதேபோல் பெண் குழந்தைகளை கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறினார்.
 
சிறுமிகளை கட்டாய மதமாற்றம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு மதமாற்ற தடைச் சட்டத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறிய போது, தவறான வழிகளில் மதமாற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்று ஏற்கனவே சட்டத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின்படி, சட்ட ரீதியில் இந்த குற்றத்திற்கு தூக்கு தண்டனை வழங்குவது சாத்தியம் அல்ல என்றும், முதல்வர் தனது ஆதரவாளர்களை திருப்திப்படுத்துவதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்றும் கூறியுள்ளனர்.
 
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மார்ச் 11ம் தேதி 4 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?