தமிழகத்தின் 2 நகரங்களுக்கு கூடுதல் விமான சேவை: விமான போக்குவரத்து அமைச்சகம்

Mahendran
திங்கள், 10 மார்ச் 2025 (15:00 IST)
சென்னையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருச்சி ஆகிய இரண்டு விமான நிலையங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னையிலிருந்து தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கு செல்லும் விமான பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து, தூத்துக்குடி மற்றும் திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு வசதியை கருத்தில் கொண்டு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ஏற்கனவே தினமும் 8 விமான சேவைகள் உள்ளன. அதேபோல் சென்னையில் இருந்து திருச்சிக்கு 14 விமான சேவைகள் உள்ளன. இந்த நிலையில், சென்னை – தூத்துக்குடி இடையே இனி 12 விமான சேவையாகவும்
சென்னை – திருச்சி இடையே 22 விமான சேவையாகவும் அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் சேவை மார்ச் 30ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments