மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக முதல்வர் கையெழுத்திட முன் வந்ததாகவும், ஆனால் "சூப்பர் முதல்வர்" அதனை தடுத்து விட்டதாகவும் மத்திய கல்வி அமைச்சர் குற்றச்சாட்டு கூறிய நிலையில், "எங்கள் முதல்வரே சூப்பர் முதல்வர் தான்" என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அனைத்திலும் முதல் பரிசை பெறுவதால், "தமிழ்நாட்டை ஓட விட மாட்டேன்" என்கிறார்கள். அதனால் தான் மும்மொழி கொள்கை என்னும் சங்கிலியை காலில் கட்டிவிட்டு "ஓடு, ஓடு" என்கிறார்கள்.
பி.எம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக குழு அமைத்த பிறகு முடிவு எடுக்கப்படும் என கடிதத்தில் தெளிவாக கூறினோம். நாட்டில் நம்பர் ஒன் முதல்வராக ஸ்டாலினே "சூப்பர் முதல்வர்" என அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், மத்திய அரசு நிதியை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிலடி, அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.