Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை தங்கம்-வெள்ளி விலை இன்றும் உயர்வு!

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2008 (18:10 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் 10 கிராமுக்கு ரூ.190-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.280-ம் அதிகரித்தது.

இன்று நகை உற்பத்தியாளர்கள் தங்கத்தை அதிக அளவு வாங்கியதால், தங்கத்தின் விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் நேற்று 1 பீப்பாய் 99 டாலராக அதிகரித்தது. இதனால் பல நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால், தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்தது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தது.

நேற்று சிங்கப்பூர் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 861 அமெரிக்க டாலராக உயர்ந்தது.

நியுயார்க் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 855.10/855.90 டாலராக இருந்தது. (நேற்றைய விலை 855.70/856.50).

வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 15.16/15.21 டாலராக இருந்தது. (நேற்றைய விலை 15.17/15.22).

இன்று காலை விலை நிலவரம்

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,995
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,950
பார் வெள்ளி 1 கிலோ ரூ.19,915
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன ஒரு புத்திசாலித்தனம்? Password-யே பாஸ்வேர்டாக வைத்த 30+ லட்சம் இந்தியர்கள்! ஈஸியா ஹேக் பண்ணிடலாம்? - அதிர்ச்சி தகவல்!

எல்லோரும் எம்.ஜி.ஆர்., ஆக முடியாது.. விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

சென்னையில் ஞாயிறு வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

Show comments