திருப்பதி கோவிலில் கூட்டமே இல்லை.. காத்திருப்பு இல்லாமல் நேரடியாக பக்தர்கள் அனுமதி..!

Siva
புதன், 24 செப்டம்பர் 2025 (08:09 IST)
திருமலை ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் இன்று தொடங்கவுள்ள நிலையில், பக்தர்கள் கூட்டம் குறைவாக இருப்பதால், இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் காத்திருக்காமல் நேரடியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
வழக்கமாக, திருப்பதி கோயிலில் இலவச தரிசனம் பெற பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. சில சமயங்களில் இந்த காத்திருப்பு நேரம் 10 முதல் 12 மணி நேரம் வரை நீடிக்கும். ஆனால், பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது நேற்று, பக்தர்கள் வருகை கணிசமாக குறைந்து காணப்பட்டது.
 
இந்த நிலையை பயன்படுத்தி, கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு சிறப்புச் சலுகை வழங்கியுள்ளது. பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக காத்திருக்காமல், நேரடியாக சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
 
இன்று  கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் சுரங்க பாதையில் சிக்கிய பொக்லைன் இயந்திரம்.. போக்குவரத்து பாதிப்பு!

மகளிர் உரிமை தொகையை இரண்டாவது கட்ட விரிவாக்கம்.. முதல்வர் இன்று தொடங்கி வைப்பு..!

ரவுடியை சுட்டு பிடித்த காவல்துறையினர்.. சென்னையில் அதிகாலை பரபரப்பு..!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments