திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிலங்களில் கட்டப்படவிருந்த சர்ச்சைக்குரிய மும்தாஜ் ஹோட்டல் திட்டத்தை, திருமலையின் புனிதத்தன்மையை பாதுகாக்கும் வகையில் மாற்று இடத்திற்கு இடமாற்றம் செய்ய ஆந்திர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒபரோய் குழுமத்திற்கு 2021 ஆம் ஆண்டு, முந்தைய ஒய்.எஸ்.ஆர்.சி.பி. அரசின் சுற்றுலா கொள்கையின் கீழ், திருமலை தேவஸ்தான நிலத்தில் 20 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த திட்டம், புனிதமான திருமலை மலைகளுக்கு அருகில் அமைந்திருந்ததால், பக்தர்கள், ஆன்மிகத் தலைவர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திருப்பதி ஆர்.எஸ். கிராமத்தில் உள்ள திருமலை தேவஸ்தான வளாகத்தில் முதலில் ஒதுக்கப்பட்ட 25 ஏக்கர் நிலத்திற்கு பதிலாக, தற்போது திருப்பதி கிராமப்புற மண்டலத்தில் உள்ள பேருரு கிராமத்தில் 38 ஏக்கர் மாற்று நிலம் ஒபரோய் குழுமத்திற்கு வழங்கப்பட உள்ளது.
இதற்கான அசல் நில ஒதுக்கீட்டை ரத்து செய்து, புதிய நில மாற்றத்திற்கான ஒப்பந்தத்தை முறையாக நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முந்தைய அரசு, மும்தாஜ் ஹோட்டல்கள், தேவலோக் திட்டம் போன்றவற்றுக்கு அனுமதி அளித்ததை நாங்கள் அதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.