அமெரிக்காவில் நடுரோட்டில் நிற்க வைக்கப்பட்ட பிரான்ஸ் அதிபர்.. என்ன நடந்தது?

Siva
புதன், 24 செப்டம்பர் 2025 (08:02 IST)
அமெரிக்காவில் , பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நடுவீதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு, சர்வதேச அரங்கில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 
அமெரிக்காவில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு சென்றுகொண்டிருந்த மேக்ரானின் பாதுகாப்பு வாகனங்கள், டிரம்ப்பின் கான்வாய் வருவதற்காக திடீரென நிறுத்தப்பட்டன. இதில் கோபமடைந்த மேக்ரான், உடனடியாக தொலைபேசியில் டிரம்ப்பை தொடர்புகொண்டு, போக்குவரத்தை உடனடியாக சரிசெய்யும்படி கோரினார்.
 
தொலைபேசியில் பேசிக்கொண்டே, மேக்ரான் தனது வாகனத்தை விட்டு இறங்கி, பிரான்ஸ் தூதரகத்திற்கு நடந்தே சென்றார். ஒரு நாட்டின் அதிபரை மற்றொரு நாட்டின் காவல் துறையினர் நிறுத்தியது, ராஜதந்திர மரபுகளை மீறிய செயல் என்று பலரும் விமர்சித்துள்ளனர்.
 
இந்தச் சம்பவம், டிரம்பின், சர்வதேச உறவுகளிலும் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை காட்டுகிறது. அதே நேரத்தில், மேக்ரானின் இந்த உறுதியான நடவடிக்கை, தனக்கு ஏற்பட்ட அவமதிப்புக்கு அவர் உடனடியாக எதிர்வினை ஆற்றியதை காட்டுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம்: உச்சத்திற்கு சென்ற மதுபானம், சிகரெட் விலை..!

சபரிமலையில் தமிழகத்திற்கு 5 ஏக்கர்.. பழனியில் கேரளாவுக்கு 5 ஏக்கர் நிலம்.. அமைச்சர் சேகர்பாபு தகவல்..!

ஜெயலலிதாவால் தான் அண்ணா அறிவாலயம் காப்பாற்றப்பட்டது: எடப்பாடி பழனிசாமி

ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலி: ஒரே நாளில் 50,000 கார்கள் விற்பனை செய்த டாடா, மாருதி, ஹூண்டாய்..!

டிராபிக்கை கட்டுப்படுத்த உதவி செய்யுங்கள்.. விப்ரோ நிறுவனத்திற்கு கர்நாடக முதல்வர் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments