Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சபரிமலையில் திடீரென நெரிசல் குறைந்தது: 30 நிமிடங்களில் தரிசனம்.. என்ன காரணம்?

Advertiesment
சபரிமலை

Mahendran

, வெள்ளி, 5 டிசம்பர் 2025 (18:30 IST)
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 17 அன்று மண்டல பூஜை தொடங்கிய நிலையில், ஆரம்பத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கேரள உயர் நீதிமன்றத்தின் தலையீட்டால், உடனடி முன்பதிவு எண்ணிக்கை 20,000லிருந்து 5,000 ஆக குறைக்கப்பட்டு நெரிசல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
 
சமீப நாட்களாக, ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களில் பலர் குறித்த நேரத்திற்கு வராததாலும் குறிப்பாக ரயில், விமானம் தாமதம் காரணமாக வெளிமாநிலப் பக்தர்கள் சரியான நேரத்திற்கு வரவில்லை. எனவே, இன்றும் சன்னிதானத்தில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இன்று அதிகாலை நிலவரப்படி, சுமார் 16,989 பக்தர்கள் மட்டுமே மலை ஏறி சென்றுள்ளனர்.
 
இதனால், பக்தர்கள் 30 நிமிடங்களுக்குள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். பதினெட்டாம் படியில் அவசரமின்றி நிதானமாக ஏறி செல்லவும் அனுமதிக்கப்பட்டனர். நேரம் தவறி வரும் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீராத தோல் நோய் தொல்லையா? இந்த கோவிலுக்கு உடனே போங்க..!