Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

Advertiesment
சபரிமலை

Siva

, திங்கள், 24 நவம்பர் 2025 (16:18 IST)
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில், சபரிமலைக்கு சென்ற நான்கு ஐயப்ப பக்தர்கள், அதிகாலை நேரத்தில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
 
இன்று அதிகாலை 2.15 மணி அளவில் மாலூர் தாலுகா, அப்பனஹள்ளி கிராமத்தில் இந்த விபத்து நடந்தது. காரில் பயணித்த நண்பர்கள் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
 
முதற்கட்ட விசாரணையில், கார் அதிவேகத்தில் சென்றதே விபத்திற்கு காரணம் என்று போலீசார் தெரிவித்தனர்.
 
அதிவேகத்தில் வந்த கார் மேம்பாலத்தின் பக்கவாட்டுத் தடுப்பில் மோதியதில், கார் சுமார் 100 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் பாய்ந்து விழுந்தது. இதனால் காரில் இருந்த நான்கு ஆண்களும் சம்பவ இடத்திலேயே துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர்.
 
கடந்த வாரம், திருப்பூரில் பெங்களூரில் இருந்து கேரளா சென்ற ஆம்னி பேருந்து விபத்தில் 37 ஐயப்ப பக்தர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சடலங்கள் உடற்கூராய்வுக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!