கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்து சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவித்து ஐயப்பனின் தரிசனம் செய்ய முயலும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
இந்த நிலையில், சபரிமலையில் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கிய பெண் ஐயப்ப பக்தர் ஒருவர் உயிரிழந்தார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோழிக்கோடு பகுதியை சேர்ந்த அந்தப் பெண், பம்பையில் இருந்து நீலிமலை நோக்கி செல்லும் போது மயங்கி விழுந்ததாகவும், முதலுதவி அளித்தும் பலன் இல்லாமல் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக பக்தர்களை நிலக்கல் பகுதியில் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபரிமலை ஐயப்பன் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.