Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நக்சலைட்டுகள் நடுவில் கிளைமாக்ஸ்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (21:26 IST)
ரவிகிருஷ்ணா, தெலுங்கு நடிகர் சர்வானந்த் நடித்திருக்கும் படம், காதல்னா சும்மா இல்லை. தெலுங்கில் வெற்றி பெற்ற 'கம்யம்' படத்தின் ரீ-மேக். கமாலினி முகர்ஜி சர்வானந்தின் ஜோடி.

ஒற்றன் இயக்குனர் இளங்கண்ணன் படத்தை இயக்கியிருக்கிறார். 7ஜி ரெயின்போ காலனி படத்துக்குப் பிறகு, தனது பெயர் சொல்லும் படமாக, காதல்னா சும்மா இல்லை இருக்கும் என்றார் ரவிகிருஷ்ணா. இந்தப் படத்துக்காக தனது நடை, உடை பாவனை அனைத்தையும் மாற்றியிருக்கிறாராம். ஏன்... குரல் மாடுலேஷனையும் மாற்றியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தெலுங்கில் படத்தின் கிளைமாக்ஸைப் பார்த்து ஆடிப் போயிட்டேன் என்று சொன்ன, இளங்கண்ணன், நக்சலைட்களின் நடமாட்டம் மிகுந்த ஆந்திர வனப்பகுதியில் படத்தின் கிளைமாக்ஸை படமாக்கியுள்ளதாகக் கூறினார்.

படத்தின் இன்னொரு ஆச்சரியம் இசை. வித்யாசகர், மணிசர்மா, மூர்த்தி என்று மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜீ.வி. பிரகாஷ் குமார் ஹாரர் திரைப்படமான 'பார்க்' தி படத்தின் பர்ஸ்ட் லுக்!

ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

மருத்துவமனையில் அஜித் மனைவி ஷாலினி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

Show comments