தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

vinoth
திங்கள், 31 மார்ச் 2025 (12:27 IST)
ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்றாக எப்போதும் இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அந்த அணியின் நட்சத்திரமாக பல ஆண்டுகளாக தோனி இருந்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் கேப்டன் பொறுப்பை ருத்துராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்தார்.

தோனி இன்னும் சில ஆண்டுகள்தான் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என்பதால் அவரைப் பார்க்க அனைத்து மைதானங்களிலும் ரசிகர்கள் ஆர்வமாகக் கூடுகின்றனர். அதன் காரணமாக டிக்கெட் விலை பலமடங்கு அதிகமாக்கப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது. ஆனால் அணிக்கு தேவைப்படும் போது இறங்கி அதிரடியாக விளையாடாமல் தோனி கடைசியாக இறங்குகிறார். இதனால் போட்டியில் முடிவிலேயே பாதிப்பு ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் தோனி பற்றி பேசியுள்ள சிஎஸ்கே அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் “தோனிக்கு 43 வயதாகிறது. அவர் நலமாக உள்ளார். ஆனால் அவரின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது. அதனால் அவரால் 10 ஓவர்கள் நின்று பேட் செய்ய முடியாது. அவரால் என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறார்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஐபிஎல் வரலாற்றில் ரிட்டர்யடு ஹர்ட் ஆன முதல் வீராங்கனை.. ரன் எடுக்க திணறியதால் அதிரடி..!

ஐசிசி தரவரிசையில் ரோகித்தை தாண்டி முன்னேறிய விராட் கோலி!....

1,403 நாட்களுக்குப் பிறகு விராத் கோலிக்கு கிடைத்த பெருமை.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்தியாவுடன் கடைசி போட்டி!.. ரசிகர்களை சோகமாக்கிய ஆஸ்திரேலிய கேப்டன்!...

ஹோபர்ட் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம் அதிர்ச்சி தோல்வி!..

அடுத்த கட்டுரையில்
Show comments