தங்கம் விலை கடந்து செல்ல நாட்களாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை தங்கம் விலை ஒரு சவரன் ரூ.66,880 எந்த நிலையில் இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்ந்து தற்போது ரூ.67,400 என விற்பனை ஆகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ரூபாய் 8,425 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 520 உயர்ந்து ரூபாய் 67,400 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 9,190 எனவும் ஒரு சவரன் ரூபாய் 73,520 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 113.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 113,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது