இந்திய வீரர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த முன்னாள் கேப்டன் தோனி!

vinoth
வெள்ளி, 28 நவம்பர் 2025 (08:03 IST)
இந்தியா  மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியையும் இழந்த நிலையில் இந்த தோல்வியால் வொயிட்வாஷ் ஆகியுள்ளது இந்தியா. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

இது பெரும் அதிருப்தியையும் கோபத்தையும் இந்திய ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. இதையடுத்து நாளை மறுநாள் ஒருநாள் போட்டிகள் தொடங்கவுள்ளன. முதல் ஒருநாள் போட்டியில் ராஞ்சியில் நடக்கவுள்ள நிலையில் இந்திய வீரர்கள் அங்கு சென்றுள்ளனர்.

அவர்களைத் தனது ராஞ்சி இல்லத்துக்கு அழைத்து விருந்தளித்து உபசரித்துள்ளார் முன்னாள் கேப்டன் தோனி. வீரர்களை அவர் தனது காரில் அழைத்து செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்திய அணி மிக மோசமாக டெஸ்ட் தொடரை முடித்துள்ள நிலையில் அவர்களுக்கு அறிவுரைக் கூறும் விதமாக தோனி இந்த விருந்தை ஏற்பாடு செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய வீரர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த முன்னாள் கேப்டன் தோனி!

கம்பீர் மீது தவறு இருக்கலாம்… ஆனால் முழுவதும் அவரே காரணமா? –அஸ்வின் ஆதரவு!

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

இந்திய அணி வெற்றி பெற்றபோது கவுதம் காம்பீரை ஏன் பாராட்டவில்லை? கவாஸ்கர் கேள்வி..!

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments