டைட்டானிக் புகழ் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் அவதார்: தி வே ஆப் வாட்டர். கடந்த 2009ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த அவதார் படத்தின் இரண்டாம் பாகமான அவதார் 2 கடந்த ஆண்டு ரிலீஸானது. இந்த படம் உலகளவில் பெரிய அளவில் வசூல் செய்தது.
இதையடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 19 ஆம் தேதி ”அவதார் 3- நெருப்பும் சாம்பலும்” படம் வெளியாகும் என அறிவித்துள்ளார் ஜேம்ஸ் கேமரூன். அதற்கான ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
இந்தியாவில் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும ஆங்கிலம் என ஆறு மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் தற்போதே இந்தியாவில் இந்த படத்தைப் பார்க்க சுமார் 12 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்னும் மூன்று வாரங்கள் மீதமிருப்பதால் அவதார் மூன்றாம் பாகம் இந்தியாவில் முன்பதிவில் மிகப்பெரிய வசூல் சாதனைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.