தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி முழுமையாக தோல்வியடைந்ததை தொடர்ந்து, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். கம்பீரை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
கவாஸ்கர் பேசுகையில், "பயிற்சியாளர் அணியை போட்டிக்கு தயார் மட்டுமே செய்ய முடியும். ஆனால், ஆடுகளத்தில் சிறப்பாக செயல்படுவது தனிப்பட்ட வீரர்களின் கைகளில்தான் இருக்கிறது," என்று கூறினார்.
மேலும் அவர் கேள்வி எழுப்பியதாவது: "கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பையை வென்றபோது, விமர்சித்தவர்கள் ஏன் அவரை பாராட்டவில்லை? வெற்றிகள் கிடைத்தபோது அவரது பதவி காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று ஏன் கேட்கவில்லை? அணி சரியாக விளையாடாவிட்டால் மட்டுமே தலைமைப் பயிற்சியாளர் மீது பழி சுமத்துவதை தவிர்க்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.