தெலுங்கு திரைத்துறையில் புகழ்பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜ்.
இவரது மனைவி அனிதா கடந்த 2017-ம் ஆண்டு மாரடைப்பால் காலமானார்.
பின்னர் இவரது மகள் ஹன்ஷிதா ரெட்டி ஆசைப்பட்டதால் மறுமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார்.
மகள் ஹன்ஷிதாவிற்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நேற்று ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் எளிமையாக தில் ராஜ் திருமணம் நடைபெற்றது.