தாலி எடுத்துக்கொடுக்கும் தாய்... அன்னையர் தினத்தில் உருக்கமான புகைப்படத்தை பகிர்ந்த சூரி!

ஞாயிறு, 10 மே 2020 (16:12 IST)
தமிழ் சினிமாவின் காமெடிய நடிகர்களுள் ஒருவரான சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானார். தனது யதார்த்தமான காமெடியால் மக்கள் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்த இவர் தொடர்ந்து விஜய் அஜித் , சூர்யா போன்ற முன்னணி நாடிகளின் படங்களில் நடித்து கிடு கிடுவென உயர்ந்தார். சூரி வளர்ந்து வந்த நேரத்தில் டாப் காமெடி நடிகராக பார்க்கப்பட்ட சந்தானத்தையே கீழே இறக்கிவிட்டார்.

பின்னர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து பிசினஸ் துவங்க திட்டமிட்ட சூரி மதுரையில் அம்மன் என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார். இப்படி சினிமா தொழில் கையில் இருந்தாலும் சைடு பிசினஸ் போன்று தனக்கு பிடித்த தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வருகிறார்.

இந்நிலையில் அன்னையர் தினமான இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  தனது  திருமண புகைப்படத்தை பகிர்ந்து "உலகத்தில் உள்ள அனைத்து தெய்வமும் ஒரே உருவத்துல தெரியுராங்கனா அது நம்ம தாயாகத் தான் இருக்க முடியும். அத்தனை அம்மாக்களுக்கும் "அன்னையர் தின" நல்வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

உலகத்தில் உள்ள அனைத்து தெய்வமும் ஒரே உருவத்துல தெரியுராங்கனா அது நம்ம தாயாகத் தான் இருக்க முடியும். அத்தனை அம்மாக்களுக்கும் "அன்னையர் தின" நல்வாழ்த்துக்கள்”

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் விஜய் சேதுபதி தப்பா ஒன்னும் பேசலையே! – ஆதரவாக களம் இறங்கிய நெட்டிசன்கள்!