மாட்டு வண்டியில் நிவாரண பொருட்கள் வழங்கிய சல்மான் கான் - வைரல் வீடியோ!

செவ்வாய், 5 மே 2020 (09:09 IST)
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நோய் பரவாமல் தடுக்க வருகிற மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் சாதாரண தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கு ஒரு நாள் பொழுதே திண்டாட்டமாக செல்கிறது. இதையடுத்து இருப்பவர்கள் இயலாதோருக்கு கொடுத்து உதவி வருகின்றனர். அரசு அறிவித்துள்ள சலுகைகளையும் தாண்டி சில தொண்டு நிறுவனங்களும் முன் வந்து ஏழை எளியோருக்கு உதவி வழங்கி வருகின்றனர். மேலும், அஜித், விஜய், ரஜினி, சூர்யா, தனுஷ், யோகிபாபு உள்ளிட்ட பிரபலங்களின் ரசிகர்களும் தங்களால் முடிந்த உதவியை வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது இந்தி சினிமாவின் பிரபல நடிகரான சல்மான் கான் அருகில் உள்ள கிராம மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளார். வாகனங்கள் கிடைக்காததால் மனித சங்கிலி போல வரிசையாக நின்று உணவுப் பொருட்களை மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் கொண்டு சென்று உதவியுள்ளனர். இதனை பாலிவுட் நடிகர்களான ஜாக்குலின் பெர்னாண்டஸ், லூலியா, கமல் கான் ஆகியோர் இணைந்து செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

@jacquelinef143 @vanturiulia @rahulnarainkanal @imkamaalkhan @niketan_m @waluschaa @abhiraj88

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் விஜய்யின் அடுத்த படத்துக்கு இசையமைப்பாளர் இவர்தான்! முதல் முறையாக கிடைத்த வாய்ப்பு!