
கன்னி-உடல் ஆரோக்கியம்
கன்னி ராசி இருப்பவர்கள் நேரம் தவறி சாபபிடுவதால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களால் அவதிபடுவார்கள். இந்த ராசி இருப்பவர்கள் பித்தம், இருமல், தும்மல், தோல் வியாதி, காது வலி, தொண்டை வலி, வாயு, அம்மை, மூட்டு வலி, முதுகு வலி, படர்தாமரை இந்த அவதிகளையெல்லாம்படுவார்கள். இந்த ராசி உள்ள நேயர்களுக்கு முடி கருப்பாக இருக்கும். சிலருக்கு முடி அழகாக இருப்பது உண்டு. இவர்களுக்கு ஏற்படும் தலைவலியால் கண் பார்வை குறையும் வாய்ப்புள்ளது. அதிகமாக யோசித்தால் மூளை பாதிப்பு ஏற்படும். ஞாபகசக்தி, ஆஸ்த்துமா, ரத்த கசிவு, வயிற்று வலி, இருமல் எல்லாம் வர நேரிடலாம். மனதுக்கு கஷ்டத்தை கொடுக்காமல் இருந்தால் உடல் நலம் நன்றாக இருக்கும். உடல் பயற்சி, நடை பயிற்சி செய்தால் உடல் நலம் நன்றாக இருக்கும். உடல் நலத்தை நன்றாக கவனிக்க வேண்டும். இதில்தான் நன்மை இருக்கிறது. பழச்சாறு, காய்கறி கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும். புகைப்பிடித்தல், மாமிசம் இவற்றில் கவனிப்பாக இருக்க வேண்டும். மோர், தயிர் உடல் வளர்ச்சிக்கு நல்லது. வைட்டமின் டி, கால்சியம் இருக்கும் பொருட்களை உணவில் சேத்துக் கொள்ள வேண்டும். சந்தோஷமாகவும், விவேகமாக வாழ்ந்தால் உடல் நன்றாக இருக்கும்.