எகிப்தில் நடைபெற்ற சர்வதேச அமைதி மாநாட்டில், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துருக்கி அதிபர் எர்டோகன் ஆகியோர் அவரது தோற்றத்தை புகழ்ந்து பேசியது சர்ச்சையாகி உள்ளது.
மாநாட்டில் பேசிய டிரம்ப், மெலோனியை "மிக இளமையான பெண்" என்றும், "அழகி என்று சொன்னால் அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும்" என்றும் கிண்டலாக குறிப்பிட்டார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
அடுத்து, துருக்கி அதிபர் எர்டோகன், "நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், ஆனால், புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும்" என்று நேரடியாக மெலோனியிடம் கூறினார்.
அரசியல் தலைவர்கள், சர்வதேச அரங்கில் ஒரு நாட்டின் தலைவரின் திறன் குறித்து பேசுவதை தவிர்த்து, தனிப்பட்ட தோற்றம் குறித்து பேசியது அரசியல் மரபுகளுக்கு எதிரானது என்று பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.