Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்காவுக்கு போன புதின்! மலத்தை சூட்கேஸில் வைத்திருந்த சம்பவம்! - பின்னால் இப்படி ஒரு விஷயமா?

Advertiesment
putin poop suitcase

Prasanth K

, சனி, 23 ஆகஸ்ட் 2025 (17:59 IST)

அமெரிக்கா சென்ற ரஷ்ய அதிபர் புதினின் மலத்தை அதிகாரிகள் சூட்கேஸில் பத்திரமாக எடுத்துச் சென்ற சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

 

ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து போர் நடந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த போரை நிறுத்த தொடர்ந்து இரண்டு நாடுகளிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனால் அதற்கு இடையேவும் அமெரிக்கா தொடர்ந்து ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. 

 

இந்நிலையில் உக்ரைனுடனான போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ட்ரம்ப் அழைத்ததன் பேரில் சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்கா சென்றார். அலாஸ்காவில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் எந்த சுமூக முடிவும் எட்டப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தைக்கு புதின் சென்றபோது அவரோடு ஒரு சூட்கேஸும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. புதின் பயணத்தின் போது வெளியேற்றிய மலத்தை ரஷ்ய அதிகாரிகள் அந்த சூட்கேஸில் வைத்திருந்துள்ளனர்.

 

இந்த செய்தி பரவத் தொடங்கிய நிலையில் பலரும் ‘உவ்வே’ என்று குமட்டிய நிலையில் அதற்கு பின்னால் ஒரு அரசியல் காரணம் இருப்பதாக சொல்கிறார்கள். Poop Suitcase எனப்படும் அந்த பெட்டி இதற்காகவே பயன்படுத்தப்படுகிறதாம். வெளிநாடுகளுக்கு செல்லும் ரஷ்ய அதிபர் அங்குள்ள கழிப்பறைகளில் மலம் கழித்தால், அதை சோதனை செய்து ரஷ்ய அதிபருக்கு உடலில் உள்ள நோய்கள் மற்றும் உடல்நல பிரச்சினைகளை மற்ற நாடுகள் தெரிந்து கொண்டு விடும் என்பதால், அதை ரகசியமாக வைக்க இந்த சூட்கேஸ் பயன்படுகிறதாம். இந்த மலம் அடங்கிய சூட்கேஸை பத்திரமாக வைத்துக் கொள்ள ஒரு அதிகாரியும் நியமிக்கப்படுகிறாராம். 

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உள்ளூர் காவல்படையில் இணைந்த ‘நருட்டோ’ பூனை! வைரலாகும் சீலே பூனை!