உக்ரைனில் போரின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் குழந்தைகளின் நலன்களை கருத்தில் கொண்டு, போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
இந்தக் கடிதத்தில், மெலனியா டிரம்ப், போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அப்பாவித்தனத்தை புதின் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அந்த குழந்தைகள் "புவிசார் அரசியல் மற்றும் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "ஒரே ஒரு எழுதுகோல் அசைவில் குழந்தைகளின் சிரிப்பை மீட்டெடுக்க முடியும். இது ரஷியாவுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் சேவை செய்வதாக இருக்கும்" என்று புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மெலனியா டிரம்ப்பின் இந்த கடிதம் மனிதாபிமான அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த கோரிக்கையை ரஷ்யா ஏற்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.