சீலே நாட்டில் உள்ளூர் காவல் நிலையம் ஒன்றில் பூனை ஒன்று காவல் அதிகாரியாக பணியாற்றி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பல நாடுகளிலும் பூனைகள், நாய்கள் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்பட்டு வருகின்றன. ஐரோப்பாவின் பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகளில் பூனை அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இந்த நாடுகளில் மக்கள் நாய்களை விட பூனைகளுக்கு அதிக அளவு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
சமீபத்தில் சீலே நாட்டின் போர்வெனிர் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு அருகே ஒரு பூனையை சில நாய்கள் துரத்தி வந்துள்ளன. உயிர் பிழைப்பதற்காக காவல் நிலையத்திற்குள் ஓடி வந்த அந்த பூனையை அங்கிருந்த காவலர்கள் காப்பாற்றியுள்ளனர். அதற்கு பிறகு அந்த பூனை அவர்களோடே தங்கிவிட்ட நிலையில் அதற்கு ஜப்பானிய அனிமே கதாப்பாத்திரமான நருட்டோ பெயரை வைத்துள்ளனர்.
தற்போது அந்த காவல் நிலையத்தின் ஒரு பகுதியாகிவிட்ட நருட்டோவிற்கு காவல் நிலையத்திலேயே பணி வழங்கி இருக்கிறார்கள். சீலே காவலர்கள் போல அதுவும் சீருடை அணிந்து கொண்டு டேபிளில் அமர்ந்தபடி காவல் நிலையம் வருபவர்களை கண்காணிக்கிறது. தற்போது காவல் அதிகாரி நருட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
Edit by Prasanth.K