சீனாவில் கார் தாக்குதல் நடத்தி 35 பேரை கொலை செய்த 62 வயது நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இன்று அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
சீனாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 62 வயது பான் வெய்குயின் என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட விவாகரத்தை தொடர்ந்து தனது சொத்துக்கள் பகிரப்பட்ட விரக்தியில் அங்குள்ள ஒரு விளையாட்டு மைதானத்திற்கு காரில் சென்று கண்மூடித்தனமான காரை ஓட்டினார்.
அப்போது அந்த கார் மோதி 35 பேர் பலியான நிலையில் 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அந்த தீர்ப்பை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.