கேரளாவில் காதலனை விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கொலை செய்த பெண்ணுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட எல்லையான கேரள மாநிலம் பாறசாலை என்ற பகுதியைச் சேர்ந்த 23 வயது ஷரோன் ராஜ் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கிரீஷ்மா என்பவரை காதலித்தார். இந்த காதலுக்கு இரு தரப்பு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இருப்பினும் ராணுவ வீரர் ஒருவரின் உதவியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் நிச்சயதார்த்தத்திற்கு பின்னால் கிரிஷ்மா தனது காதலனை சந்திப்பதை குறைத்துக் கொண்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் இருவரும் சமாதான பேச்சு வார்த்தைக்காக சந்தித்தபோது கிரீஷ்மா தனது காதலனுக்கு விஷம் கொடுத்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த ஷரோன் ராஜ் மரணம் அடைந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்த போலீசார் கிரீஷ்மாவை கைது செய்தனர் .
இது குறித்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட கிரீஷ்மா மற்றும் அவரது தாய்மாமன் நிர்மல் குமார் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டது. இதில் காதலி கிரிஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது