கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மாணவி கொலை வழக்கில், சஞ்சய் ராய் என்பவர் குற்றவாளி என கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இன்று அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், சஞ்சய் ராய் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில், அவரை சாகும் வரை சிறையில் அடைக்க கொல்கத்தா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிக்கு ₹50,000 அபராதம் விதித்துள்ளது.
கடந்த வாரம் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இன்று நீதிபதி தண்டனை விவரங்களை வெளியிட்டார். முன்னதாக, தண்டனை குறித்து இரு தரப்பு வாதங்கள் வைக்கப்பட்ட நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சஞ்சய் ராய் சாகும் வரை சிறையில் அடைக்கப்படும் வகையில் ஆயுள் தண்டனை விதித்துள்ளார்.
முன்னதாக, சிபிஐ தரப்பில் இந்த வழக்கில் குற்றவாளிக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என வாதிக்கப்பட்டது. ஆனால், மரண தண்டனை விதிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்ற தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சஞ்சய் ராய் குற்றவாளி என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என அவருடைய தாயார் மற்றும் சகோதரி தெரிவித்தனர்...