அமெரிக்கா விதித்த கூடுதல் வரிகளுக்கு எதிராக இந்தியாவுக்கு ஆதரவாக நிற்போம் என சீனா கூறியுள்ளது, உலக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்துள்ள நிலையில், சில இந்திய துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், சீனாவும் இந்தியாவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான சீனத் தூதர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "இந்தியாவின் மீது அமெரிக்கா 50% வரிகளை விதித்து அச்சுறுத்தி வருகிறது. சீனா இதை உறுதியாக எதிர்க்கிறது. இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும்போது இந்தியாவுடன் சீனா உறுதியுடன் இருக்கும். இந்தியாவும் சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளி நாடுகள்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அடுத்த வாரம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சந்திப்பின்போது, சீன அதிபர் சீ ஜின்பிங்கும் இந்திய பிரதமரும் அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.