போர்க்களத்தில் இருக்கும் இஸ்ரேல் வீரர்களின் உணவுகள் என்னென்ன? சைவமும் உண்டு..!

Mahendran
வெள்ளி, 20 ஜூன் 2025 (16:13 IST)
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் போர்க்களத்தில் உள்ள இஸ்ரேல் வீரர்களுக்கான உணவு வகைகள் குறித்த தகவல் தற்போது கசைந்துள்ளது
 
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்  வீரர்களில் பெரும்பாலோர் யூத மதத்தினர், ஒரு சிலர் இஸ்லாமியர்கள். இரண்டு மதங்களுக்கும் பொதுவான உணவு விதிமுறைகள் உள்ளன. எனவே, வீரர்களுக்கான உணவு கண்டிப்பாக கோஷர் அல்லது ஹலால் ஆக இருக்கும். பன்றி இறைச்சி, மட்டி மீன்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி போன்ற பிற இறைச்சிகள் அனுமதிக்கப்பட்டாலும், கோழி இறைச்சியே அவர்களுக்கு விருப்பமானது. காரணம்? சமைக்க குறைந்த நேரம், நல்ல சுவை, எளிதில் கிடைப்பது.
 
குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சைவ உணவுப் பிரியர்களுக்கு ஃபாலாஃபெல், சபிச் போன்ற சிறப்புஉணவுகள் கிடைக்கின்றன. காலை உணவாக டுனிசியன் சாண்ட்விச்கள், ஹம்மஸ், மியூஸ்லி போன்றவை வழங்கப்படுகின்றன. மதிய உணவில் கிரில்ட் சிக்கன், ஷவர்மா, ஹாம்பர்கர் போன்ற அசைவ உணவுகளும், டோஃபு ஷினிட்செல், சைவ ஹாம்பர்கர் போன்ற சைவ உணவுகளும் உண்டு. இரவு உணவும் மதிய உணவு போல இருந்தாலும், அளவு குறைவாக இருக்கும்.
 
உலகின் பல ராணுவங்களில் மது அருந்த அனுமதி இருந்தாலும், இஸ்ரேல் பாதுகாப்பு படைகளில் மதுபான நுகர்வுக்கு கடுமையான தடை உள்ளது. எந்த வீரரும் பணியிலோ அல்லது முகாமிலோ மது அருந்த அனுமதிக்கப்படுவதில்லை.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

2027-ல் ககன்யான் திட்டம்.. அடுத்து இந்தியாவின் விண்வெளி மையம்! - இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!

தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியாதா? 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

ரூ.1812க்கு ஒரு வருட வேலிடிட்டி.. தினம் 2 ஜிபி டேட்டா.. பி.எஸ்.என்.எல். அசத்தல் திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments