அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில், 30 வயது இந்திய தொழில்நுட்ப வல்லுநரான முகமது நிஜாமுதீன், காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க காவல்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையின்படி, தெலங்கானா மாநிலம் மகபூப்நகரைச் சேர்ந்த முகமது நிஜாமுதீன், செப்டம்பர் 3ஆம் தேதி சாண்டா கிளாரா நகரில் உள்ள தனது வீட்டில் கத்தியுடன் இருந்ததாகவும், அப்போது அவர், தன் அறை நண்பரை கத்தியால் தாக்கி, அவரை கீழே தள்ளியதாகவும் கூறப்படுகிறது.
ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக கிடைத்த 911 அவசர அழைப்பின் காரணமாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், நிஜாமுதீனை சுட்டு கொன்றதாக தெரிகிறது,. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். கத்தியால் குத்தப்பட்ட அவரது அறை நண்பரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனால், நிஜாமுதீனின் குடும்பத்தினர் இதுவொரு இனவெறி பாகுபாடு காரணமாக செய்யப்பட்ட கொலை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.