இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்சினைகள் மறைந்து இருவரும் ஒன்றாக வாழ்வார்கள் என டொனால்டு ட்ரம்ப் பேசியுள்ளார்.
உலகில் பல நாடுகள் இடையே நடக்கும் போர்களை தடுத்து நிறுத்துவதில் ஆர்வம் காட்டி வரும் டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்து பல முயற்சிகளை மேற்கொண்டார். அதன் பயனாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
எகிப்து நாட்டில் ஷர்ம் அல் ஷேக்கில் நடந்த அமைதி உச்சி மாநாட்டில் டொனால்டு ட்ரம்ப் கலந்துக் கொண்ட நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன், துருக்கி அதிபர் எர்டோகன், எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல் சிசி, கத்தார் அதிபர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
அதில் பேசிய டொனால்டு ட்ரம்ப், “பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்றாக வாழ்வார்கள் என நம்புகிறேன்.. சரிதானே?” என கேள்வி எழுப்பியவாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிபை கண்டு சிரித்தார்.
பின்னர் பேசிய அவர் “இந்தியா ஒரு சிறந்த நாடு. அங்கு என்னுடைய நண்பர் உச்சப்பதவியில் இருக்கிறார். அவர் அற்புதமான வேலைகளை செய்கிறார்” என பிரதமர் மோடியையும் புகழ்ந்து பேசியுள்ளார்.
Edit by Prasanth.K