முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை காண குடும்ப உறுப்பினர்களுக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் இம்ரான்கானின் சகோதரி உஸ்மான் கானம் என்பவர் சிறையில் இம்ரான் கானை சந்தித்து பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
இம்ரான் கான் நலமாக இருக்கிறார் என்றும், ஆனால் அதே நேரத்தில் அவர் கோபத்தில் இருந்தார் என்றும், அவரை அதிகாரிகள் மனரீதியில் துன்புறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
இம்ரான் கானை 30 நிமிடங்கள் சந்தித்தேன் என்றும், அவரை யாருடனும் தொடர்பு கொள்ள விடாமல் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர் என்றும், அவர் அறைக்குள் மட்டுமே இருக்கிறார் என்றும், அவருடைய இந்த நிலைக்கு அசிம் முனீர் தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த சந்திப்பை அடுத்து, இம்ரான் கான் கொலை செய்யப்பட்டு விட்டார் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.