திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து இன்று மாலை மலையில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
பஞ்ச பூதங்களில் அக்னி தளமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கோயிலில் வண்ண மின் விளக்குகள் மற்றும் அலங்கார மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் நடை திறக்கப்பட்டு 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை அடுத்து பக்தர்கள் "அண்ணாமலைக்கு அரோகரா" என்ற கோஷத்தை எழுப்பினர்.
இன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது என்பதும், இதற்காக பக்தர்கள் குவிந்துள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.