பாகிஸ்தானோடு மீண்டும் போரிட்டு பாருங்கள் என இந்தியாவுக்கு சவால் விடுக்கும் விதமாக பேசியுள்ளார் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர்.
இந்தியாவின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூரை தொடங்கிய இந்திய ராணுவம், பயங்கரவாத முகாம்களை தாக்கியது. இதனால் பாகிஸ்தான் - இந்தியா இடையே போர் மூண்ட நிலையில், பின்னர் அமைதி பேச்சுவார்த்தையால் போர் முடிவுக்கு வந்தது.
ஆனால் போர் முடிவடைந்த பிறகும் தொடர்ந்து இந்தியாவை சீண்டும் விதமாக பாகிஸ்தான் பிரமுகர்கள் பேசி வருகின்றனர். அவ்வாறாக தற்போது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப் “இந்திய ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களின் சமீபத்திய கருத்துகள் சிந்தூர் தாக்குதல் தோல்வியில் அவர்கள் இழந்த கறைபடிந்த நம்பகத்தன்மையை மீட்பதற்கான தோல்வியடைந்த முயற்சியாகும். 0-6 என்ற கீழான மதிப்பெண்ணுக்கு இணையான மோசமான தோல்விக்கு பிறகும், ஒருவேளை அவர்கள் மீண்டும் முயற்சித்தால் முந்தைய மதிப்பெண்ணை விட கூடுதல் மதிப்பெண் பெறலாம், கடவுள் விரும்பினால். எங்களுடன் மீண்டும் போரிட வாருங்கள். அப்போது இந்தியா அதன் போர் விமான இடிபாடுகளில் புதைந்து போகும்” என பேசியுள்ளார்
தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கு பிறகும் போரை தூண்டும் விதமாக பாகிஸ்தான் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K